அழகிரி அங்கென்னா
அரங்கத்தில் அம்மாங்க - நம்மள
அம்மாவும் அய்யாவும்
மாறி மாறி ஆண்டாலும்
கட்சி கொடி கலருலதான்
வித்தியாசம் இருக்குங்கோ !
கொள்கையெல்லாம் ஒண்ணுங்கோ..
அது ...
"ஆம்புட்ட வரை அள்ளுங்கோ" ...
கணக்கில்லாம அள்ளுனத
கணக்கு பாத்து தாராங்க
ஆளுக்கீராயிரம்
ஆளரவுங்க தாராங்க
ஆளாத கட்சியாரும்
ஐந்நூறு தாரங்க !!
கருக்கலில வாரங்க
கதவைத் தட்டி தாராங்க !
ஆமா !
யாருங்கடா சொன்னது
PDS சொதப்பலுன்னு ....
இரண்டு பேர அனுப்புங்க
இங்க வந்து பாக்கட்டும் - எம்மா
கச்சிதமா நடக்குது இங்க
அம்மா money திட்டமுன்னு ...
ஆஹா !
எந்த மடையன் சொன்னது
சனநாயகம் நடக்குதுன்னு ?
வந்து இங்க பாக்கட்டும்
நல்லாவே வெளங்கிடும்
ஊரல செழிப்பா நடக்கறது
பணநாயக ஆட்சியின்னு ..
அரங்கத்தில் அம்மாங்க - நம்மள
அம்மாவும் அய்யாவும்
மாறி மாறி ஆண்டாலும்
கட்சி கொடி கலருலதான்
வித்தியாசம் இருக்குங்கோ !
கொள்கையெல்லாம் ஒண்ணுங்கோ..
அது ...
"ஆம்புட்ட வரை அள்ளுங்கோ" ...
கணக்கில்லாம அள்ளுனத
கணக்கு பாத்து தாராங்க
ஆளுக்கீராயிரம்
ஆளரவுங்க தாராங்க
ஆளாத கட்சியாரும்
ஐந்நூறு தாரங்க !!
கருக்கலில வாரங்க
கதவைத் தட்டி தாராங்க !
ஆமா !
யாருங்கடா சொன்னது
PDS சொதப்பலுன்னு ....
இரண்டு பேர அனுப்புங்க
இங்க வந்து பாக்கட்டும் - எம்மா
கச்சிதமா நடக்குது இங்க
அம்மா money திட்டமுன்னு ...
ஆஹா !
எந்த மடையன் சொன்னது
சனநாயகம் நடக்குதுன்னு ?
வந்து இங்க பாக்கட்டும்
நல்லாவே வெளங்கிடும்
ஊரல செழிப்பா நடக்கறது
பணநாயக ஆட்சியின்னு ..
No comments:
Post a Comment